in

வில்லனாக களமிறங்கும் விக்ரம்..? கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இதுதான் கேரக்டர்..!

கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்பு, கொரோனா பரவலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில், விக்ரம் பெரிய ரிஸ்க் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த படத்தில், துருவ் ஹீரோவாகவும், விக்ரம் வில்லனாகவும் நடிக்க இருக்கின்றனராம். இந்த தகவலால், விக்ரம் ரசிகர்கள் ஒரு பக்கம் சோகமும், ஒரு பக்கம் எக்சைட்மென்ட்டும் ஆகியிருக்கின்றனர்.