விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் ’கோப்ரா’. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இப்பத்தை தயாரிக்கிறார். இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் விக்ரமின் ‘கோப்ரா’ படமும் ஒன்று.

Advertisement

இந்நிலையில் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.