ரிலீசுக்கு முன்பே ரூ. 200 கோடி அள்ளிய கமலின் ‘விக்ரம்’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Advertisement

இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில், விக்ரம் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ. 200 கோடிக்கும் மேல் வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.