சர்ச்சையில் சிக்கும் கமல் எழுதிய பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். மிகப்பெரிய எதிர்பார்ப்புடான் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வருகிற 15 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் நேற்று மாலை இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியது. இந்த பாடலை கமல்ஹாசனே எழுதி பாடியுள்ளார்.

இந்தப் பாடலில் ‘ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே’ என்ற வரியை எழுதியுள்ளார். ஒன்றிய அரசை தாக்கிதான் இந்த வரிகளை எழுதி உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Advertisement