Search
Search

விக்ரம் திரை விமர்சனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

vikram movie review in tamil

மாஸ்க் அணிந்த மர்ம கும்பல் காவல்துறையில் இருப்பவர்களை கொலை செய்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராம் கொல்லப்படுகிறார். காளிதாசனின் வளர்ப்பு அப்பா கமலும் கொல்லப்படுகிறார்.

இந்த வழக்கை சீக்ரெட் ஏஜென்சிஸ் ஆக இருக்கும் பகத் பாசிலுடன் ஒப்படைக்கப்படுகிறது. மாஸ்க் மனிதர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பகத் பாசிலுக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கிறது.

இறுதியில் பகத் பாசில் அந்த மாஸ்க் மனிதர்களை கண்டுபிடித்தாரா? அவர்கள் காவல் துறையினரை கொலை செய்ய காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கமல் முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் விக்ரமாகவும் நடித்திருக்கிறார். நடனம், ஆக்ஷன், என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

கமலுக்கு அடுத்தபடியாக பகத் பாசில் சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் சேதுபதியின் அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காயத்ரி, மைனா, சிவானி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

கைதி படத்தை போலவே விக்ரம் படத்தின் மையக் கதையும் அமைந்துள்ளது. மொத்தத்தில் தனது குரு கமல்ஹாசனுக்கு ஒரு சூப்பர் கம்பேக் படமாக விக்ரம் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

Leave a Reply

You May Also Like