“நண்பனுக்கு ஒன்னுனா நட்பு வரும்” – கலெக்டரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது நண்பர்கள்…

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, இவர், கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்த செயலை பார்த்து இவரை பல்வேறு தரப்பினர் பாரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 லட்சம் மதிப்பிலான கட்டில்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி முன்னாள் (1993-97) மாணவர்கள் வழங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி முன்னாள் (1993-97) மாணவர்கள் வேற யாரும் இல்லை, ஆட்சியர் அண்ணாதுரையுடன் ஒன்றாக படித்த நண்பர்கள். தன் நண்பன் ஒருவர், ஆட்சியராக சிறப்பாக செயல்படுவதை அறிந்த அவர்கள் கொரோனா பாதிப்பில் மிக முக்கியமான பின்தங்கிய மாவட்டமாக விழுப்புரம் இருப்பதால் அதற்கு உதவும் வகையில் இந்த உதவியை செய்துள்ளனர்.

Advertisement

சிலரது கல்லூரி கால நட்பு பல்வேறு பொறுப்புகளின் காரணமாக காலபோக்கில் மறந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட நண்பர்களில் மத்தியில் இப்படிப்பட்டவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.