5 ரூபாய் எலுமிச்சை பழம், 50 ஆயிரத்திற்கு ஏலம்..! போட்டி போட்டு கொண்டு வாங்கிய மக்கள்

கடைகளில் 5 மற்றும் 6 ரூபாய்களில் விற்கப்படும் எலுமிச்சை பழம், கோவில் பூஜைக்கு பின் 50 ஆயிரத்திற்கு ஏலம் போன சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.

பொதுவாக கோவில்களில்  இறைவனுக்கு படைக்கப்படும் சில பொருட்கள் பொதுமக்கள் மத்தியில் ஏலம் விடுவது வழக்கம். அப்படி ஒரு நிகழ்வு தான் விழுப்புரத்திலும் நடந்துள்ளது. விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் பழைமையான கோவில் ஒன்று உள்ளது, அந்த கோவில் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி  பெற்றது.

இந்த கோவில் திருவிழா ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும். அங்கு அந்த சாமிக்கு படைக்கப்படும் எலுமிச்சை பழங்கள் அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் ஏலத்திற்கு வந்தது. மொத்தமாக 9  எலுமிச்சைப் பழங்கள் ஏலத்திற்கு வந்தது.

Advertisement

அவை அனைத்தும் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 900க்கு ஏலம் போயுள்ளது. முதல் பழம் ரூ 59 ஆயிரத்திற்கும், இரண்டாம் பழம் ரூ,19 ஆயிரத்துக்கும், மூன்றாம் பழம் ரூ.25 ஆயிரத்திற்கும், நான்காம் பழம் ரூ,14,500க்கும் ஏலம் போகியுள்ளது. மேலும்  மீதமுள்ள பழங்கள் இதை விட சற்று குறைவாக ஏலம் போனது. குறிப்பிடத்தககது.