வேலை செய்யவிடாமல் பாகனுடன் சண்டை போடும் குட்டியானை

யானைக்கும், யானைபாகனுக்கும் இடையேயான பிணைப்பு அற்புதமான ஒன்றாகும். ட்விட்டரில் சம்ரத் கவுடா என்பவர் வீடியோ ஒன்று போட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒருவர் கட்டைக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்.

அவருக்கு பின்னால் உள்ள தடுப்புக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் யானைகுட்டி ஒன்று கதவை திறக்குமாறு அந்த நபரை வேலை செய்யவிடாமல் தும்பிக்கையால் அவரது தோள்பட்டையில் தட்டி இடையூறு செய்கிறது.

அவர் எழுந்து மீண்டும் அவரது பணியை செய்கிறார். பிறகு தடுப்பின் மீது கால்களை வைத்து மேலே ஏறிக்கொண்டு மீண்டும் அவரை தொந்தரவு செய்து செல்லமாக சண்டை போடுகிறது. இந்த வீடியோவை இணையவாசிகளில் பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர்.

Advertisement