எந்திருச்சு நடக்கவே முடியாத பிரக்யா சிங் : குத்தாட்டம் போட்டதால் சர்ச்சை

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய பிரக்யா சிங் மீது 4 ஆயிரம் பக்கங்களுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது “என்னால் எந்திருச்சு நடக்க கூட முடியவில்லை. அந்த அளவிற்கு உடலில் பிரச்சனை உள்ளது” என கூறி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார். நீதிமன்றமும் அவருக்கு விலக்கு அளித்தது.

சில தினங்களுக்கு முன் பிரக்யா சிங் கூடைப்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருமண விழாவில் பிரக்யா சிங் உற்சாக நடனமிட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

நீதிமன்றத்தையே ஏமாற்றிய பிரக்யா சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பாப்போம்.