Search
Search

ராட்சசன் ராம்குமாருடன் மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் – ஹீரோயின் யார் தெரியுமா?

தமிழ்நாடு காவல்துறையில் மிகப்பெரிய பதவியில் இருந்த ரமேஷ் அவர்களின் மகன் தான் நடிகர் விஷ்ணு விஷால். வேலூரில் பிறந்து, திருச்சியில் தனது பள்ளி படிப்பை முடித்து, சென்னையில் எம்பிஏ பட்டதாரி ஆக பட்டம் பெற்றவர் இவர்.

சினிமா மற்றும் கிரிக்கெட் என்று இரு துரையின் மீதும் அதீத காதல் கொண்ட ஒரு நல்ல நடிகர். 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இவர் கதையின் நாயகனாக அறிமுகமானார்.

முதல் திரைப்படத்திலேயே மக்கள் நெஞ்சில் ஒரு நீங்காத இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பலே பாண்டியா, முண்டாசுப்பட்டினம், இன்று நேற்று நாளை போன்ற ஜனரஞ்சகமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் இருந்து இவர் பட தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது மோகன்தாஸ், ஆரியன் மற்றும் லால்சலாம் ஆகிய திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கிறது.

இந்நிலையில் 2018ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் வெளியாகி விஷ்ணு விஷாலுக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்த ராட்சசன் படத்திற்க்கு பிறகு தற்போது மீண்டும் ராம்குமாருடன் இணையவிருக்கிறார் விஷ்ணு.

ஒரு Fantasy படமாக இந்த படம் இருக்கும் என்றும், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like