Search
Search

விசித்திரன் திரை விமர்சனம்

பத்மகுமார் இயக்கத்தில் RK சுரேஷ், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் விசித்திரன். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜோசப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் இந்த விசித்திரன்.

Visithiran Movie Review Tamil

காவல் துறையில் பணியாற்றிவரும் RK சுரேஷ் பூர்ணாவை திருமணம் செய்து கொள்கிறார். பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள்.

RK சுரேஷின் மகளும், மனைவியும் ஒரேமாதிரி விபத்தில் இறந்து போகிறார்கள். இதனால் மனம் உடைந்த RK சுரேஷ் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இவருடன் பணிபுரிந்த காவல்துறை நண்பர்கள் இளவரசு, மாரிமுத்து ஆகியோர் உடன் இருக்கிறார்கள்.

பிறகு அது விபத்து அல்ல கொலை என தெரியவருகிறது. இறுதியில் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்? அந்த கொலையாளி யார் என்பதுதான் படத்தின் கதை.

வில்லன் கதாாத்திரத்தில் நடித்து வந்த ஆர் கே சுரேஷ் ஒரு வித்தியாசமான நாயகன் வேடத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.

இயக்குனர் பத்மகுமார் கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கேற்றாற் போல, திரைக்கதையை நகர்த்தி சென்றது படத்திற்கு மிகப்பெரும் பலமாக உள்ளது. பல மருத்துவமனைகளில் நடக்கும் ஒரு மோசமான செயலையும் தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர் பத்மகுமார்.

வெற்றி வேல் மாஹேந்திரன் ஒளிப்பதிவு நன்றாக காட்சி படுத்திருக்கிறார். அதுவும் படத்திற்க்கு கூடுதல் அழகு சேர்த்து உள்ளது.

பகவதி பெருமாள், இளவரசு, ஜார்ஜ் மர்யான், அனில் முரளி பாண்டி ரவி போன்றோர் தங்கள் நடிப்பு திறமை வெளிபடுத்திள்ளனர்.

மனித உயிர்களைக் காக்க வேண்டிய மருத்துவத்துறையில் மருத்துவ மாஃபியா கதையை த்ரில்லர் கதையாக மிக நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் விசித்திரன் – எமோஷனல் த்ரில்லர்

Leave a Reply

You May Also Like