விஸ்வாசம் திரை விமர்சனம்

பொதுவாக அஜித் படம் என்றாலே செம மாஸ். அதிலும் இது ஃபேமிலி படம் என்பதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.

ரோபோ சங்கர், தம்பி ராமையா, விவேக், யோகிபாபு என ஒரு பெரிய காமெடி நடிகர்களின் பட்டாளமே இதில் நடித்துள்ளார்கள்.

கொடுவிளார்பட்டி என்ற ஒரு கிராமத்தில் தூக்குதுரை (அஜித்) ஒரு பெரிய மனிதர். அஜித் பத்து வருடங்களாக தனது மனைவி நயன்தாராவையும், மகளையும் பிரிந்து இருக்கின்றார். எதனால் பிரிந்தார்கள்? மீண்டும் அஜித், நயன்தாரா இணைந்தார்களா? என்பதுதான் படத்தின் கதை.

Advertisement

அஜித் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் செம மாஸ் காட்டியுள்ளார். முதல் பாதி இளமையான அஜித், இரண்டாம் பாதியில் வயதான அஜித் என தல ரசிகர்களுக்கு மாஸ் காட்டுகின்றார்.

நயன்தாராவின் கேரக்டருக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. முதல் பாதி ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார்.

இமானின் இசையில் பாடல்கள் இனிமையாக உள்ளது. பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார். திலீப் சூப்பராயனின் சண்டை காட்சிகள் அனைத்தும் மிக அருமை.

மிலனின் கலை வடிவத்தில் களைகட்டும் திருவிழா, மழை, நெல்விளையும் நிலம் என அனைத்தையும் தன் ஒளிப்பதிவில் வண்ணமயமான காட்சிகளாக்கியுள்ளார்.

வில்லனாக வரும் ஜெகபதிபாபு அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளது. முதல் பாதியில் டாக்டராக இருந்த நயன்தாரா இரண்டாம் பாதியில் எப்படி தொழிலதிபர் ஆனார் என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ஒரு நல்ல மெசேஜ் உடன் படம் முடிகிறது.

மொத்தத்தில் தல ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும் படமாக அமைந்துள்ள படம்தான் ‘விஸ்வாசம்’