வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன?

வைட்டமின் ஏ என்பது ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது பல உடல் செயல்முறைகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இனப்பெருக்கம், கண் பார்வை மேம்படுதல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

எனவே வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த வகை யில் வைட்டமின் ஏ சத்து அடங்கிய உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

மீன் எண்ணெய்

மீன் எண்ணெய் வைட்டமின் ஏ நிறைந்த சிறந்த ஆதாரமாகும். 1 டேபிள் ஸ்பூன் மீன் எண்ணெயில் 4,080 மைக்ரோகிராம் அளவிற்கு வைட்டமின் ஏ காணப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இதய நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் புரதம், விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச் சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டு இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

கேரட்

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது மலச்சிக்கலை தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. ப்ரோக்கோலியில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கலை சரி செய்யவும் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

Recent Post