குளிர் காலத்தில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் என்ன நடக்கும்?

கோடை காலத்தில் நமக்கு அதிகமாக தாகம் எடுக்கும். ஆனால் குளிர்காலத்தில் அதிக தாகம் எடுக்காது. இதனால் நாம் தண்ணீர் குடிக்காமல் இருப்போம். இதன் காரணமாக உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படும். குளிர்காலமாக இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்த வேண்டும்.

குளிர் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

குளிர்காலத்தில் தாகம் எடுக்காவிட்டாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவேண்டும். ஆண்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 14 கிளாஸ் தண்ணீரும், பெண்கள் 8 முதல் 12 கிளாஸ் தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.

தண்ணீர் குடிக்காமல் இருந்தால் என்ன ஆகும்?

குளிக்காலத்தில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளது. நாம் சாப்பிடும் அளவை பொறுத்து தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் அருந்தாமல் இருந்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

Also Read : குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் வாய் வறட்சி ஏற்படும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் வியர்வை மற்றும் சிறுநீர் குறைவாக வெளியேறும். இதனால், உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறாமல், வாய்நாற்றம் எடுக்கும்.

உடலில் போதிய தண்ணீர் இல்லாததால், வயிற்றில் அமிலம் உருவாகும். இதன் காரணமாக, வயிற்றில் வாயு, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

உடலில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால், சிறிய வேலை செய்தாலும் சோர்வாக இருக்கும். எனவே உடல் சுறுசுறுப்பாக செயல்பட தண்ணீர் அவசியம் அருந்த வேண்டும்.

Recent Post

RELATED POST