கங்குவா என்றால் நெருப்பா? சீரியஸாக அர்த்தம் தேடும் சூர்யாவின் ரசிகர்கள்!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அடுத்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் மிகப்பெரிய பொருட்செலவிலான படம் இதுவென்று கூறப்படுகிறது.
பல நாள் காத்திருப்புக்கு பிறகு நேற்று ஏப்ரல் 16ம் தேதி இந்த படத்தின் டீசர் மற்றும் படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. பலரும் கூறியதை போல இதுவரை கேள்விப்படாத ஒரு பெயராக “கங்குவா” என்ற பெயர் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
பெயர் வெளியிடப்பட்ட நேரம் முதல் அதற்கான அர்த்தத்தை தொடர்ந்து தேடி வருகின்றனர் சூர்யாவின் ரசிகர்கள். கங்கு என்றால் தணல் கக்கும் நெருப்பு என்ற பொருள் உண்டு, ஆகையால் நெருப்பின் பலம் கொண்ட வீரன் தான் கங்குவா என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
கேட்க நல்லாத்தான் இருக்கு, ஆனால் உண்மை அர்த்தம் படக்குழுவிற்கு மட்டுமே வெளிச்சம். 2024ம் ஆண்டு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் அய்யா தனஞ்செயன் அவர்கள், ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை உள்ளது என்று கூறி இன்னும் சுவாரசியத்தை அதிகரித்துள்ளார்.