மூல நோய்க்கான முக்கிய அறிகுறிகள் என்ன..?

மூல நோய்க்கான அறிகுறிகள்:-

ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் தோன்றாமல் வருவது தான் நோய்களின் இலக்கணம். மூலநோயும் அப்படித்தான். ஆனால் டிகிரி அளவில் வரும்போது ஒவ்வொரு அறிகுறியும் டிகிரிக்கு ஏற்ப தனித்தனி அறிகுறிகள் ஒவ்வொருவர்க்கும் தோன்றுவது உண்டு. பொதுவான அறிகுறிகளைப் பற்றி தெறிந்து கொள்ளுங்கள்.

மலம் கழிக்கும்போது வலி :

Advertisement

சாதாரன மூலக்கட்டி ஆரம்பிக்கும்போது ஆசனவாயசை்சுற்றி வலியோ எரிச்சலாே தோன்றி நீண்ட நேரம் மறையாது.

இரத்தம் கசிதல்:-

மூலக்கட்டி பெரிதாக வளர்ந்தாள் மலத்தோடு கலக்காமல் பச்சை இரத்தம் தனியாகக் கொட்டும். நமைச்சல் ஏதாே கட்டி தொங்குவது போன்ற உணர்வும், ஆசன வாய்ப் பகுதியில் பிசுபசுப்பான திரவக் கசிவும், மலம் கழிக்கும் போது சதை முட்டை போல வெளியே தொங்கும் இருக்கும்.

இந்த நிலயைில் நமி்ச்சலும் வலியும் தாங்க முடியாத அளவுக்கு ஏற்படும். நிண்ட நேரம் மறையாது.

நீண்ட நேரம் உட்காருதல்:-

மலம் கழித்த திருப்தி ஏற்படாமல், மீண்டும் மலம் கழிக்கும் உணர்வுடன் நீண்ஞ நேரம் உட்காரந்திருக்கத் தோன்றும். கழிப்பறைக்கு சென்றால் மலம் வராது.

முக்கினால் இரத்த நாளங்கள் வெளியே வரத் தொடங்கும். சில சமயங்களில் இரத்த நாளம் சிதைத்து இரத்த கசிவு தோன்றுவதும் உண்டு.

டாக்டர்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

குடலை ஆராயும் கருவியை வைத்து கண்டுபிடிப்பார்கள். ஆசன வாய்ப்பகுதியில் வரும் இரத்தக் கசிவு மாதக்கணக்கிலாே, ஆணடுக் கணக்கிலோ இருப்பதை வைத்து கண்டறிவாற்கள்.

மலம் கழிக்கும்போது கட்டிகள் வெளியே வந்து உள்ளே செல்லும் இந்நிலையிருக்கம் போது நோயாளிகள் டாக்டரிடம் பரசோதனை செய்து கொண்டால் கண்டறிவது சுலபம்.

நோயாளி வயிற்றில் கல்லைப் போட்டு அடைத்திருப்பது போன்ற உணர்வு இருக்கிறது என்றும், வேலை செய்யாதபோதே களைப்பாக இயுக்கிறது என்றும், ஆசன வாய்ப் பகுதியில் உறுத்தலும், அடைப்பும் இருப்பது போன்றும், எப்போது கீழ் வயிறு உப்பிக் கொண்டிருப்பது போன்ற உணர்வும் இருப்பதாக நோயாளி சொன்னால் அதை வைத்து நோயை கண்டுபிடிப்பார்.

ஆசனவாய்ப்பகுதியில் தாங்க முடியாத நமிச்சல் ஏற்பட்டு சொறியும் நிலையில், தொட்டால் அப்பகுதி முழுவதும் பிசு பிசுப்பாக திரவமும் இருந்தால் அது மூலநோயின் அறிகுறியாக இருக்கும். இதை வைத்தும் கண்டறிவர்.

ஆசன வாய்ப் பகுதியில் தாங்க முடியாத வலியிருந்தால் அதை வைத்தும் டாக்டரால் மூல நோயை முற்றிலும் கண்டறிய முடியும். உங்களுக்கு திடிரென எடை குறைந்தாலும் மலம் கழிக்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். மூலநோயின் பாதிப்பாகவும் இருக்கலாம்.

யார் யாருக்கு மூலநோய் வரும்..?

சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரையில் யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடிய ஒரு நோய் மூலநோய். ஒரே குடும்பத்தில் எல்லோருக்கும் கூட இது வரலாம்.

நாற்பது வயதைத் தாண்டியவர்கள், சொகுசு வாழ்க்கை வாழப்பழகியவர்கள், பள்ளிப் பருவத்திலிருந்தே மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், சரியான உணவு முறை இல்லாதவர்கள் Fast food ஐயிட்டங்களை விரும்பி சாப்பிடுகிறவர்கள், நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்கிறவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், குறைந்த அளவு தண்ணீர் அருந்துவோர், பளு தூக்குவோர், கர்பிணிகள் ஆகியோருக்கு மூலநோய் வரும்.

இதைத்தவிர, அடிக்கடி வயிற்றுப்போக்கு, சீதள பேதியால் பாதிக்கப்படுதல், பரம்பரை, சுற்றுச்சூழல், வயது சோம்பல், அடிக்கடி எனிமா எடுத்துக்கொள்ளுதல், வாழ்க்கை முறை, நார்ச்சத்து இல்லாத நிலை, காலம் தாழ்த்தி மலம் கழிக்கும் பழக்கம் ஆகிய காரணங்களாலும் மூலநோய் வரும். பலரால் தனக்கு வந்திருப்பது மூல நோய் தானா என்று இனம் கண்டறிய முடியாது.

பவுத்திரம் எனப்படுகிற புரைபுண், பிஸ்டுலா எனப்படும் ஆசனவாய்க் கட்டி, பிஸ்ஸர் எனப்படும் ஆசனவாய் வெடிப்பு போன்ற அனைத்தையும் மூலநோயின் வகை என தவறாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முறையான மருத்துவம் படிக்காதவர்கள் காலம் காலமாக மக்களை இப்படி நம்ப வைத்திருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

இந்த பிரச்சனைகள் அனைத்தும் தனித்தனியானவை என்பதையும், இந்த நோய்களுக்கான காரணங்கள், அவற்றின் அறிகுறிகள், அவற்றை தடுக்கும் வழிகள் என அனைத்தையும் நீங்கள் தெரிந்துக்கொண்டால், எந்த பாதிப்பு, எந்த நோய்க்கு உரியது என்பதையும், அதனை தடுக்கும் சரியான வழிமுறைகளையும் அறிந்து கொள்வீர்கள்.