Search
Search

இனி வாட்ஸ் அப்பிலயே பார்க்கலாம் ஃபேஸ்புக், யூடியூப் வீடியோக்கள்

குறுஞ்செய்தி, போட்டோ மற்றும் தகவல்களை பறிமாறிக் கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப், தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்புது அப்டேட்களை வ‌ழங்கி அசத்தி வருகிறது.

உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கைக்கு சென்ற பிறகு அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. ‌உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலி மூலம் நாள் ஒன்றுக்கு 6 கோடியே 50 லட்சம் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் அனைவருமே வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். அந்தளவுக்கு வாட்ஸ் அப்பின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

அண்மையில் ஸ்டிக்கர்ஸ், ஸ்டேட்டஸில் விளம்பரம் என புதுப்புது அப்டேட்களை வழங்கி பயனர்களிடம் வரவேற்பை பெற்ற வாட்ஸ் அப், தற்போது புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.

அதன்படி வாட்ஸ்அப்பில் பகிரப்படும் யூ டியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வீடியோ லிங்குகளை வாட்ஸ்அப் பக்கத்தில் இருந்து வெளியே செல்லாமல் அங்கேயே பார்க்கக்கூடிய‌ வசதியை அறிமு‌கப்படுத்தவுள்ளது.

ஆப்பிள் ஐபோன்களில் மட்டுமே செயல்பட்டுவந்த பிக்சர் இன் பிக்சர் என்ற வசதி இனி ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் செயல்படவுள்ளது. இதன் மூலம் யூ டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ் அப்பிலே பார்க்கலாம்.

பிக்சர் இன் பிக்சர் வசதியின் மூலம் வாட்ஸ் அப்பிற்கு வரும் லிங்கை கிளிக் செய்தவுடன் லிங்குக்கு மேற்பகுதியிலே அந்த வீடியோக்கள் பிளே ஆகும்.

வீடியோக்களை பார்த்துக்கொண்டே நம்மால் சாட் செய்யவும் முடியும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன்களில் வெளிவந்துள்ள இந்த வசதி விரைவில் அனைவரது வாட்ஸ் அப்பிலும் அப்டேட்டாகும் என எதிர்பார்க்கப்‌படுகிறது.

இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்களை மற்ற சமூக வலைதளங்களுக்கு செல்லவிடாமல் வாட்ஸ் அப் தனக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது

Leave a Reply

You May Also Like