சர்வதேச விமான சேவை எப்போது..? மத்திய அமைச்சர் பேட்டி..!

கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் சர்வதேச விமான சேவையை ரத்து செய்துள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாடுகளில் இருந்து சுமார் 2.75 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர்.

Advertisement

அதில், தமிழகத்தில் 20,000 பேரும், கேரளாவில் 70,000 பேரும், டெல்லியில் 56,000 பேரும் திரும்பி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமான சேவை எப்போது தொடங்கும் என்று கேள்விக்கு, அது மற்ற நாடுகளை பொறுத்துதான் முடிவெடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.