இதையெல்லாம் சாப்பிட்டால் ஞாபக மறதி ஏற்படும்..! லிஸ்ட் இதோ..!

முன்னுரை:-

மூளையின் செயல் திறனை பாதிக்கும் உணவுகள் என்ன என்றும், அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும் தற்போது பார்க்கலாம்.

விளக்கம்:-

Advertisement

ஞாபக மறதி என்பது பொதுவாக வயதான நபர்களுக்கு தான் ஏற்படும். ஒரு சில நேரங்களில் குழந்தைகளுக்கும் ஏற்படும். ஆனால், இன்றைய நாட்களில் பலருக்கும் இந்த பிரச்சனை இருந்து வரும் அபாயம் இருக்கிறது. சில உணவுப்பொருட்களாலும், வேறு சில காரணங்களாலும் ஞாப மறதி ஏற்படுகிறது.

ஞாபக மறதியை ஏற்படுத்தும் உணவுகள்:-

குளிர்பானங்கள்

சோயா

கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவு

குளிர்பானங்கள்:-

கார்ப்போஹைட்ரேட் குளிர்பானங்களில் நிறைந்து இருப்பதாலும், அதில் சர்க்கரை அதிகமாக இருப்பதாலும், மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும். இதன்காரணமாக, ஞாபக மறதி அதிகமாக ஏற்படும்.

சோயா:-

சோயாவில் குறிப்பிட்ட சில சத்துக்கள் நிறைந்து இருந்தாலும், அதனால் ஏற்படும் தீமைகள் சற்று அதிகமே. இந்த உணவுப்பொருளில் சோடியம் எனப்படும் உட்பொருள் இருப்பதால், அது ஞாபக மறதிக்கு வழிவகுக்கும்.

கார்ப்போஹைட்ரேட் உணவு பொருள்:-

ஏற்கனவே கூறியது போல கார்ப்போஹைட்ரேட் உணவு பொருட்கள் அதிகம் எடுத்துக்கொள்வது உடல் கேட்டிற்கு வழிவகுக்கும். எனவே சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், வெள்ளை சோறு, போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதற்கு பதிலாக காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தலாம்.