நாய்குட்டியிடம் I LOVE YOU-னு சொன்ன வெள்ளை கிளி.. வைரல் வீடியோ

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ பல லைக்குகளை அள்ளிகுவித்து வருகிறது. மேரி என்ற பெண் பல செல்லபிராணிகளை வளர்த்து வருகிறார்.

அந்த பிராணிகள் செய்யும் சின்ன சின்ன குறும்பு தனத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் கருப்பு நாய் ஒன்றை மடியில் படுக்க வைத்து தூங்க வைத்துள்ளார். இதனை அவரது வீட்டில் வளரும் வெள்ளை கிளி பார்த்துள்ளது. உடனே அந்த பெண்மனியின் பக்கத்தில் வந்த வெள்ளை கிளி, குழந்தையை கொஞ்சுவது போல அந்த நாயை தடவி கொடுத்து ஐ லவ் யூ என்று சொல்லியுள்ளது.

இதனை வீடியோவாக எடுத்து மேரி தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பல லைக்குகளை குவித்து வருகின்றனர்.