காவிரி விவகாரத்தில் அண்ணாமலை யார் பக்கம் நிற்பார்? நெட்டிசன்கள் கேள்வி!

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பா.ஜ.கவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த அவர் தற்போது தமிழக பா.ஜ.கவின் தலைவராக உள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த அண்ணாமலை ஆட்டுக்குட்டிகளைத் தூக்கியபடி தற்சார்பு வாழ்க்கை வாழப்போவதாக அறிவித்த சில நாட்களிலேயே பா.ஜ.க-வில் இணைந்தார்.

நான் எப்போதுமே பெருமைமிக்க கன்னடர். எனது உயிர் இருக்கும் வரை, எனது உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை, நான் ஒரு பெருமைமிக்க கன்னடன். என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

Advertisement

இந்நிலையில், தமிழக பா.ஜ.கவின் தலைவராகியிருக்கும் அண்ணாமலை, காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக இருப்பாரா? தமிழ்நாட்டுக்கு ஆதரவாகச் செயல்படுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.