டைப் ரைட்டரில் ஏன் எழுத்துகள் வரிசையாக இல்லை..? கத்துக்கலாம் வாங்க..!

இந்த உலகத்தில் உருவாக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் ஒரு காரணத்திற்காக தான் உருவாக்கப்படுகின்றன. ஏன், மனிதர்களே ஏதோ ஒரு காரணத்திற்காக தான் கடவுளால் உருவாக்கப்படுகின்றனர் என்று ஒரு கூற்று தெரிவிக்கிறது.

அந்த வகையில், மனிதன் உருவாக்கக் கூடிய பொருட்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதற்கான காரணங்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிகிறது. அவற்றை உங்களுக்கு சொல்லும் நிகழ்ச்சி தான் இந்த கத்துக்காலம் வாங்க.. வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்..

டைப் ரைட்டர் :-

1867-ஆம் ஆண்டும் கிறிஸ்டோபர் என்ற நபர் டைப் ரைட்டரை முதன்முறையாக உருவாக்கினார். இவர் முதன்முதலில் டைப் ரைட்டரை உருவாக்கும்போது, அதன் எழுத்துகளை வரிசையாக தான் உருவாக்கினார்.

இதையடுத்து, அதனை பயன்படுத்தியவர்களுக்கு அது மிகவும் எளிமையாக இருந்தது. ஆனால், எளிமையாக இருக்கிறது என்பதற்காக, நிறைய பேர் டைப் ரைட்டரை பயன்படுத்தி, அதனை பழுதடைய வைத்தனர்.

இதனால், அச்சம் அடைந்த கிறிஸ்டோபர், தனது மெஷினுக்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், அதன் எழுத்துகளை மாற்றி அமைத்தார். அதன்பிறகு, டைப் ரைட்டரை எல்லோராலும் எளிமையாக டைப் செய்ய முடியவில்லை. மெஷினுக்கும் ஆபத்து இல்லாமல் இருந்தது.

இதன்பிறகு, டைப் ரைட்டரை வடிவமைத்த அனைவரும் அந்த ஃபார்மெட்டிலே வடிவமைத்தனர். அதவாது, டைப் செய்பவர்கள் எளிமையாக அதனை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக தான் இவ்வாறு செய்தார்களாம்..

கிறிஸ்டோபர் செய்த அந்த செயலால், இன்றும் பலர் டைப் ரைட்டிங் கிளாசஸ் நடத்தி நன்றாக வருமானம் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.