சூப்பர் ஸ்டாரின் தர்பார்.. படத்தின் வீழ்ச்சிக்கு இது தான் காரணம் – 3 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த முருகதாஸ்

ஏ.ஆர் முருகதாஸ், கள்ளக்குறிச்சி பெற்றெடுத்த நல்ல முத்து, சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் சென்னை நோக்கி பயணம் எடுத்து இன்று வெற்றி கண்ட பல இயக்குனர்களில் இவரும் ஒருவர். தன் வாழ்க்கையை வசனகர்த்தாவாக தொடங்கிய இவருக்கும் இயக்குனராக முதல் வாய்ப்பு கொடுத்தது தல அஜித் தான்.
தீனா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது சுமார் 22 ஆண்டுகளாக இந்த தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இயக்குனர் என்ற பெயரை பெற்று பயணித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்களை இயக்கியுள்ளார்.
ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி மற்றும் ரங்கூன் போன்ற பல திரைப்படங்கள் இன்றளவும் இவர் பெயர் சொல்லும். இறுதியாக இவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான தர்பார்.
சுமார் மூன்று ஆண்டுகளாக முருகதாஸ் எந்த படத்தையும் இயக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த முருகதாஸ் தர்பார் படத்தின் வீழ்ச்சி குறித்து பேசி உள்ளார்.
“சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்குவது எளிதில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, அது எனக்கு கிடைத்த உடனேயே அதன் பயன்படுத்த ஆர்வம் கொண்டேன். ஆனால் பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டு மார்ச் மாத்தில் நாங்கள் தர்பார் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டோம்.”
“மார்ச் மாதம் துவங்கிய படம், சூப்பர் ஸ்டாரின் அரசியல் பயணத்தால் மே மாதத்திற்குள் முடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் திரைக்கதை அமைக்கும் தரத்தை நானே தேவையின்றி அதிகமாக மதிப்பிட்டுவிட்டேன் என்று தான் கூறவேண்டும். அது எனக்கு ஒரு மிகப்பெரிய பாடம்” என்று கூறியுள்ளார்.