Search
Search

லாலி பாப் குச்சியில் இந்த ஓட்டை ஏன் இருக்கு..? ஷாக்கான காரணம்..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து சாப்பிடும் மிட்டாய்களில் ஒன்று லாலி பாப். இந்த மிட்டாய்களை ருசித்து சாப்பிடும் நாம், அதை சாப்பிட்ட பிறகு அந்த குச்சியில் இருக்கும் ஓட்டையை பார்த்திருப்போம்.

ஆனால், அந்த ஓட்டை எதற்காக உள்ளது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அந்த துளை அமைக்கப்பட்டதற்கு பின், ஒரு அதிர்ச்சி காரணம் உள்ளது. அந்த காரணம் பற்றியும், லாலி பாப்பின் வரலாறு பற்றியும் தற்போது பார்க்கலாம்..

அமெரிக்காவின் கனெக்டிகட் என்ற பகுதியை சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித் என்ற நபர் தான் முதன்முதலில் லாலி பாப் மிட்டாயை கண்டுபிடித்தார். 1908-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த மிட்டாய், உருவான சில நாட்களிலேயே பெரும் வரவேற்பை பெற்றது.

இனிப்பான மிட்டாயை மிகவும் எளிமையாக சாப்பிடுவதற்காக தான் லாலி பாப் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் இந்த மிட்டாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை சாப்பிடும் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கலாம்.

அதாவது, அந்த மிட்டாயை முழுமையாக சாப்பிட்டு முடித்த பிறகு, அதன் குச்சியில் ஒரு துளை இருக்கும். அது எதற்காக இருக்கிறது என்று நம்மில் பலருக்கும் கேள்வி எழுந்திருக்கும்.

அதற்கான காரணம் என்னவென்றால், நம் மிட்டாயை சாப்பிட்டு முடிக்கும் வரை, மிட்டாய் குச்சியில் இருக்கமாக இருப்பதற்காக தான். இல்லையென்றால், மிட்டாய் நீண்ட நேரத்திற்கு குச்சியில் நிற்காது.

இந்த ஒரு காரணத்திற்காக தான் அந்த துளை பயன்படுத்தப்படுகிறது. இந்த துளை இல்லையென்றால், மிட்டாய் குச்சியில் சரியாக நிற்காமல், நம் சாப்பிடும் போது வாயின் உள்ளே விழுந்து, தொண்டையில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது.

இதனால், உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். இதன் காரணமாக தான் லாலி பாப் மிட்டாயின் குச்சியில் துளை உள்ளது. இவ்வாறு தொண்டையில் மிட்டாய் சிக்கி, அமெரிக்காவில் சில குழந்தைகள் உயிரிழந்து பிறகு தான், அந்த துளை மிட்டாயில் பொறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You May Also Like