கொரோனாவால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? காரணம் இதுதான்.

உலகம் முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகள் கடுமையான தாக்கத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரசால் பெண்களை விட ஆண்களுக்கு இரண்டு மடங்கு பாதிப்பு அடையும். என பிரிட்டன் தேசிய புள்ளி விவரம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்கள் 71% பேர் ஆண்கள்தான். பிரிட்டனில் சுமார் 4,122 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 2,523 பேர் ஆண்கள். 1,599 பேர் பெண்கள்.

கொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், பெரும்பாலான ஆண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர்களுடைய நுரையீரல் பாதிக்கப்பட்டு இருக்கும். ஆகையால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாகிறது.

Advertisement