Search
Search

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? உண்மையான காரணம் இதுதான்..!

aanmigam in tamil

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என சொல்வது ஏன்? புரட்டாசி மாதத்தில் எதற்காக விரதம் இருக்கிறார்கள்? என்பதை பற்றி இதில் விரிவாக பார்ப்போம்.

aanmiga kurippugal

புரட்டாசி மாதம் புனிதமான மாதங்களுள் ஒன்று. செப்டம்பரில் தொடங்கி அக்டோபர் வரை புரட்டாசி நீடிக்கும். இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் என்பது மகாவிஷ்ணுவின் சொரூபம் ஆகும். புரட்டாசி மாதம் பெருமாளின் மாதமாக பார்க்கப்படுகிறது. எனவே புரட்டாசி மாதங்களில் அசைவம் சாப்பிடுவது, புகைப்பழக்கம், மதுப் பழக்கத்தை நிறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக் கிழமைகளில் இந்துக்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்குவது சனியின் பாதிப்புகள் நம்மை நெருங்காமல் இருக்கும்.

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என சொல்வதற்கு பின்னல் அறிவியல் காரணமும் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும். மழை பெய்யும் போது பூமியில் இருந்த வெப்பம் வெளியே வர ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் அசைவம் சாப்பிட்டால் உடல் சூடு மேலும் அதிகமாகும். இதனால் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.

புரட்டாசி விரதம் ஏன்?

பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் நோய்த் தொற்றிலிருந்து உடலைக் காக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்கள் தடுக்கப்படும். இதனால் தான் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர்.

Leave a Reply

You May Also Like