மார்ஜின் ஏன் போடுகிறோம்..? வாங்க கத்துக்கலாம்..!

நோட்டு புத்தகங்களில் பெரும்பாலும் அனைவரும், மார்ஜின் போட்டு எழுதும் பழக்கம் கொண்டிருப்போம். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதாலும், வரிசை எண்களை எழுதுவதற்கும் தான் என்று நினைத்திருப்போம்.

ஆனால், ஆரம்ப காலத்தில் மார்ஜின் போட்டதற்கு பின்பு ஒரு கதை இருக்கிறது. அது என்னவென்றால், அந்த காலங்களில் இருந்து இன்று வரை பல்வேறு வீடுகளில் எலிகள் முக்கியமான ஆவணங்களையும், பணத்தையும், துணிகளையும் கடித்து வருவது வழக்கம்.

இதனால், நம் நோட்டுகளில் எழுதும் முக்கியமான படிப்பு சம்பந்தமான விஷயங்களை எலிகள் கடித்து விடக்கூடாது என்பதற்காக தான் இந்த மார்ஜின்.

அதவாது, எலிகள் எப்போதும், நோட்டின் ஓரமுள்ள பகுதிகளை தான் கடித்து வைக்கும். அவ்வாறு கடிக்கும்போது, மார்ஜின் இடது பக்கம் இருக்கும் பகுதி தான் சேதமடையும். இதனால் தான் மார்ஜின் ஆரம்ப காலங்களில் போடப்பட்டது.