ரத்தம் சொட்ட.. சொட்ட.. மனைவியின் கோர முகம்.. நடந்தே மருத்துவமனை சென்ற கணவன்..!

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள ஆலங்கேட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேஷ்.

பூந்தோட்டத்தில் தனது பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற இவர், உணவு கொண்டு வராதது குறித்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, தனது கையில் இருந்த சமையல் செய்யும் உபகரணத்தை எடுத்து வெங்கடேஷை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைத்த வெங்கடேஷ், ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.

Advertisement

இதனைப்பார்த்தும், மனைவி அலட்சியமாக இருந்துள்ளார். மனைவி ஒரு உதவியும் செய்யவில்லை.

ஊரடங்கு என்பதால், ஆட்டோ, பேருந்து வசதி இல்லாததால், நடந்தே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.