விஜய் சேதுபதியின் அடுத்த படம் வந்துவிட்டது. முக்கிய அப்டேட்..!

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தை இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் விவேக், மகிழ்திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். நடிகைகள் கனிகா, ரித்விகா ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகின்றனர். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இப்படத்தின் முருகா என்ற முதல் பாடலை மார்ச் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Advertisement