இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழும் யோகிபாபு தனது வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்து வருகிறார்.

யோகிபாபு நடிப்பில் வெளிவந்த ‘மண்டேலா’ படத்தில் யதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தினார். சமூக கருத்துகளை நகைச்சுவையுடன் சொன்ன இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் யோகி பாபு நடிக்கும் வீரப்பனின் கஜானா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், பூஜா, தேவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Advertisement