in

தரமான சம்பவம் இருக்கோ.. பா.ரஞ்சித்துடன் லீடு ரோலில் கலக்க இருக்கும் யோகிபாபு..!

சந்தானத்திற்கு பிறகு காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டபோது, அதனை நிறைவு செய்தவர் நடிகர் யோகி பாபு.

90-களில் இருந்தே பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்த இவர், பன்னி மூஞ்சி வாயன் என்னும் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் நிறைந்தார்.

வருடத்திற்கு 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் இவர், சில சமயங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பா.ரஞ்சித் தயாரிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில், நடிகர் யோகிபாபு லீடு ரோலில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு, லாக்டவுனுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.