ஒரு நொடியில் உயிர் தப்பிய மது பிரிய இளைஞர்கள்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்

ரயில் இவர்கள் மீது மோதி விடுமோ என்று அச்சத்தை தரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அர்ஜெண்டினா நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இளைஞர்கள் பலர் மது அருந்தி விட்டு, மது அருந்தும் விடுதியில் இருந்து ரயில் நிலையம் வரை இரு தரப்பிரனர்க்கும் சண்டை போட்டுக்கொண்டு வந்தனர்.

அந்த சண்டை ரயில் நிலையத்தில் பெரிய மோதலாக மாறிவிட்டது. இந்நிலையில் அவர்கள் ரயில் தண்டவாளத்தில் சண்டை போட்டுக்கொண்டிருப்பதை அருகில் உள்ளவர்கள், இவர்கள் மீது ரயில் மோதி விடுமோ என்று பயத்தில் மிரண்டு போயினர்.

ஆனால் சண்டை போட்டவர்கள் போதையில் ரயில் வருவதையும் அறியாமல் சண்டைபோடுவதில் மும்முரமாக இருந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த ரயில் அவர்கள் மீது மோதுவது போல் வந்தது, ஆனால் ஒரு நொடியில் நகர்ந்து உயிர்தப்பினார்கள் மது பிரியர்கள். அந்த உயிர் தப்பிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.