வீடியோக்களை பதிவேற்றும் பிரபல யூடியூப் தளம் ஜூலை 15 முதல் புதிய வருவாய் விதிமுறைகளை அறிமுகப்படுத்த உள்ளது.
மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்கள் , காப்பியடிக்கப்பட்ட வீடியோக்கள் அல்லது தரம் குறைந்த உள்ளடக்கங்கள் மூலம் இனி வருவாய் சம்பாதிக்க முடியாது என அறிவித்துள்ளது. கிளிக்பைட், ஒரே மாதிரியான அல்லது ஏஐ உருவாக்கிய உள்ளடக்கங்கள் கொண்ட சேனல்களுக்கு வருவாய் கிடைக்காது.
ADVERTISEMENT
புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பார்வையாளர்களுக்கு பயனுள்ள உள்ளடக்கங்களுக்கே மட்டுமே வருவாய் வாய்ப்பு வழங்கப்படும். குறிப்பாக, கல்வி மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான தரமான விடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட உள்ளது.