ஹிந்தி மொழி சர்ச்சை…ஊழியரை பணிநீக்கம் செய்தது zomoto நிறுவனம்..!

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் zomotoவில் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியுள்ளார். அதில் “இந்தி இந்தியாவின் தேசிய மொழி, அதைக் கற்றுக்கொள்ளவும்” என zomoto நிறுவனம் பதிலளித்தது.

இந்நிறுவனத்திற்கு எதிரான #boycottzomato மற்றும் #Reject_Zomato என்ற 2 ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வந்தன. பலர் இந்நிறுவனத்திற்கு எதிரான தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கோரியுள்ளது zomato நிறுவனம். மேலும் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளது.

Image