தரக்குறைவாக பேசியதால் வாடிக்கையாளரின் மூக்கை உடைத்த ஜொமாட்டோ ஊழியர்

கர்நாடக மாநிலம் பெங்களூவை சேர்ந்தவர் ஹிதேஷா சந்திரனி. இவர் அழகுக் கலை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 9ம் தேதி ZOMATO- வில் உணவு ஒன்றை ஆடர் செய்துள்ளார். அந்த உணவு வருவதற்கு தாமதமானதால் அந்த உணவை ரத்து செய்யுமாறு கஸ்டமர் கேரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார் ஹிதேஷா.

அந்த நேரத்தில் உணவு டெலிவரி பையன் காமராஜ் வீட்டு வாசலுக்கு வந்துள்ளார். அப்போது டெலிவரி பையனுக்கும், ஹிதேஷாக்கும் இடையே தகாரறு ஏற்ப்பட்டுள்ளது. அந்த தகராறில் டெலிவரி பையன் மிகுந்த சத்தமிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைய முயன்றதாக அப்பெண் கூறியுள்ளார். மேலும் அப்பெண் தன்னுடை பாதுகாப்பிற்காக செருப்பை கையில் எடுத்தேன். என்றும், அதனால் டெலிவரி பாய் காமராஜ் எனது மூக்கை உடைத்துவிட்டு தப்பிச்சென்று விட்டான் என்று ஹிட்டேஷா கூறியுள்ளார்.. இதனை வீடியோவாக பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.. இந்த வீடியோ இணையத்தி வைரலாகி வருகிறது.

இருதரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்டுள்ள ஜொமாட்டோ, இது குறித்து போலீசார் உதவியுடன் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போல எதிர்காலத்தில் நடக்காது எனவும் உறுதி அளித்துள்ளது. இதற்கிடையே இன்ஸ்டாகிராமில் ஹிதேஷா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement