பயனுள்ள வீட்டு மருத்துவ குறிப்புகள்

தக்காளி சாஸ் செய்யும் போது, அதில் ஐந்து பல் வெள்ளை பூண்டையும் மைபோல் அரைத்து சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும். அஜீரணம் வராமல் காக்கும்.
மாதுளம் பிஞ்சை தயிருடன் சேர்த்து மை போல் அரைத்து சாப்பிட்டால் ரத்த பேதி குணமாகும்.
கசகசாவுடன் சிறிது கருப்பட்டி நாலு கிராம்பு சேர்த்து பொடித்து 3 வேளை சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.
தேங்காய் வழுக்கையுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச் சூடு தணியும்.
வெந்தயத்துடன் நான்கு கிராம்புகளை வைத்து, சிறிது நீர் தெளித்து, மை போல அரைத்து, தலையில் பூசி அரைமணி நேரத்திற்கு பிறகு குளித்தால், பொடுகு தொல்லை ஈர்கள் அழியும்.
ஆரஞ்சு பழத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொண்டால் குடலில் தீமை செய்யும் பூச்சிகள் உண்டாகாது.
வெள்ளைப் பூண்டுடன் சிறிது துளசி சாறு சேர்த்து அரைத்து தேமல் மேல் பூசி வந்தால் தேமல் மறையும்.
வெங்காய ரசத்தையும் எலுமிச்ச பழ ரசத்தையும் சம அளவில் கலந்து காலரா நோயாளிகளுக்கு கொடுத்து வந்தால், வாந்தி பேதி நின்றுவிடும்.
கறிவேப்பிலை கரிசலாங்கண்ணி கீழாநெல்லி போன்றவைகளின் சாறு கலந்து காய்ச்சிய எண்ணெய் தடவி வர இளநரை மாறும்.
வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலி இருக்காது.
பச்சை வெங்காயத்துடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் விலகும்.
வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து தடவி வர மூட்டு வலி நீங்கும்.
கொத்தமல்லியின் இலைச் சாற்றை பற்றாக நெற்றியில் போட்டால் தலைவலி குறையும்.
அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழித்தால் ஆரைக்கீரை சாப்பிடலாம்.
தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும்.
கமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும் பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.
பனங்கிழங்கு பித்தத்தை நீக்கி உடல் பலத்தை அதிகரிக்கும்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தத்தை உருவாக்கும்.
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
அகத்திக் கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும் வயிற்றுப்புழுக்கள் அழியும்.
நெல்லிக்காய் சாற்றில் கொஞ்சம் பசு நெய்யை கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வாருங்கள் இருதயம் பலப்படும் உடலும் பலப்படும்.
கொய்யாப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய்கள் நீரிழிவு நோய்கள் குணப்படுத்தும்.
வெந்நீரில் நிறைய உப்பு போட்டு தொண்டையில் படும்படி வைத்திருந்து கொப்பளிக்க தொண்டை வலி தொண்டை கமறல் குணமாகும்.
பசும்பாலில் மஞ்சள் பொடியையும் சிறிது மிளகுப் பொடியையும் போட்டு காய்ச்சி நன்றாக கொதி வந்ததும் இறக்கி பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேலை சாப்பிடுங்கள் இருமல் சரியாகிவிடும்.
கற்கண்டுடன் சீரகத்தை சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர இருமல் குணமாகும்