தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதி காலத்திலிருந்தே உள்ளது. தற்போது டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
தரையில் சம்மணம் போட்டு சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் என்பது முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

தரையில் அமர்ந்து சாப்பிடும் போது குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால் வயிறு தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது.
தரையில் அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை மூளை நமக்கு தெளிவாக சொல்லி விடுகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.
நாம் ஒரு குடும்பமாக தரையில் அமர்ந்து சாப்பிடும் போது மன அமைதி கிடைக்கிறது. மேலும் நல்ல உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவும் முடிகிறது.
தரையில் அமர்ந்து சாப்பிடும் போது நமது முதுகெலும்பும் தோள்களும் சீரான நிலையில் இருக்கும். மேலும் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடும்.
டேபிளில் அமர்ந்து சாப்பிடும் போது புவி ஈர்ப்பு விசை காரணமாக கால்களுக்கு ரத்தம் பாய்கிறது. ஆனால் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது ரத்த ஓட்டம் இதயத்தில் மட்டுமே சீராக இருக்கும். இதனால் நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.