இன்று பறந்த விமானங்கள் எவ்வளவு? பறக்காத விமானங்கள் எவ்வளவு? – அமைச்சர் தகவல்

கொரேனாவால் இந்தியாவில் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் துவங்கின. இதில், மேற்கு வங்காளம் விமான சேவையை இன்னும் துவக்கவில்லை, மகாராஷ்டிரா 50 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் 532 விமானங்கள் இயக்கப்பட்டன மற்றும் இதில் 39,231 பேர் பயணித்துள்ளனர் என மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களுக்காக 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த தகவல் பயணிகள் விமான நிலையம் வந்த பிறகே தெரிவிக்கப்பட்டதால் கடும் கோபம் அடைந்தனர்.
ஆந்திர பிரதேசத்தில் நாளை முதலும், மேற்கு வங்காளத்தில் 28-ந்தேதியில் இருந்து விமானசேவை தொடங்க இருக்கிறது.