777 சார்லி திரை விமர்சனம்
கன்னட சினிமாவின் முன்னனி நடிகரான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கி இருக்கும் சினிமா 777 சார்லி. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறு வயதில் தாய் தந்தையை இழந்த நாயகன் ரக்ஷித் ஷெட்டி யாருடனும் பழகாமல் தனியாக வீட்டில் வாழ்ந்து வருகிறார். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு நாய் அவரிடம் வந்து சேருகிறது.
முதலில் நாயை வெறுக்கும் ரக்ஷித் ஷெட்டி, பிறகு அதனுடன் பழக ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் நாய்க்கு கேன்சர் பாதிப்பு இருப்பது தெரியவருகிறது. கொஞ்ச நாட்கள்தான் அது உயிருடன் இருக்கும் என கால்நடை மருத்துவர் கூறுகிறார்.
நாய் மீது அன்பு பாசம் வைத்திருக்கும் ரக்ஷித் ஷெட்டியால் இதை தாங்க முடியவில்லை. இறுதியில் நாயை குணப்படுத்தினாரா? இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.
ஒரு மனிதனுக்கும் ஒரு நாய்க்கும் உள்ள பாசப்பிணைப்பை உருக வைக்கும் அளவிற்கு சொல்லியிருக்கும் படம்தான் 777 சார்லி. கன்னட படமான இதை தமிழுக்கு டப்பிங் செய்துள்ளனர். இது ஒரு டப்பிங் படம் என்பதே தெரியாமல் உணர்வு பூர்வமாய் இயக்கியுள்ளார் இயக்குனர் கிரண் ராஜ்.

நாயகனாக நடித்திருக்கும் ரக்ஷித் ஷெட்டி, வித்தியாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார். சார்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் அனைவரையும் ஈர்த்திருக்கிறது.
டாக்டராக ராஜ் பி ஷெட்டி, சிறப்புத் தோற்றத்தில் பாபி சிம்ஹா சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.
நோபின் பால் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அரவிந்த் எஸ்.காஸ்யப்பின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
மொத்தத்தில் ‘777 சார்லி’ – பேரன்பு
