Connect with us

TamilXP

உங்களுக்கு முட்டை பிடிக்குமா?..அதிகமா சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் வரும்..!!

மருத்துவ குறிப்புகள்

உங்களுக்கு முட்டை பிடிக்குமா?..அதிகமா சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் வரும்..!!

புரோட்டீன் நிறைந்த முட்டைகள் பல வீடுகளில் காலை உணவாக இருக்கின்றன. ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிட வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது. இதன் காரணமாக ஒரு நாளைக்கு பல முட்டைகளை சாப்பிடுகிறார்கள். எனவே ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகளை சாப்பிட வேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிக முட்டைகளை சாப்பிடுவது ஒவ்வாமை போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. ஒவ்வாமை உள்ளவர்கள் முட்டை மற்றும் முட்டை உள்ள பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

முட்டையை குறைந்த அளவிலேயே சாப்பிடுவது அவசியம். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் நோயை அதிகரிக்கும். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் முட்டை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிகப்படியான முட்டைகளை உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது இன்சுலின் எதிர்ப்பையும் அதிகரிக்கிறது. சிலருக்கு முட்டை சாப்பிட்ட பிறகு வாயு, வீக்கம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான [பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை மட்டுமே சாப்பிட வேண்டும்.அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது விளையாட்டு வீரர்களாக இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 4 முட்டைகள் சாப்பிடலாம்.

ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் இரண்டு முட்டைகளை சாப்பிடுவது நல்லது என்று பல சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள்.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top