என்ன சிம்ரன் இது.. கணவரை விவாகரத்து செய்த பெண்.. வளர்ப்பு மகனோடு திருமணம்..!

ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டார். அதில், 7 வயதுடைய சிறுவனுடன் தான் நிற்கும் புகைப்படம் ஒன்றையும், அதே சிறுவன் 20 வயது இருக்கும் போது, தான் அவனை கட்டிப்பிடித்து நிற்கும் புகைப்படம் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டிருந்தார்.

இதனைப்பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு எதிராக மோசமான கமெண்ட்டுகளை வீசி வந்தனர். இதையெல்லாம் பொருட்படுத்தாத அந்த பெண், திடீரென அந்த 20 வயது இளைஞனை திருமணம் செய்துக்கொண்டுள்ளதாகவும், தான் கர்ப்பமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்டு அந்த பெண்ணை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதன்பிறகு தான், திருமணம் செய்த 20 வயது இளைஞர், அந்த பெண்ணின் வளர்ப்பு மகன் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது, அந்த ரஷ்ய பெண் 15 வருடங்களுக்கு முன்பு, அலெக்ஷி என்ற நபரை திருமணம் செய்துக்கொண்டார். அலெக்ஷியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் தான் அந்த 20 வயது இளைஞர். ரஷ்ய பெண்ணும், அலெக்ஷியும் விவாகரத்து பெற்ற பின், இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து 10 வருடங்களுக்கு பின், தனது வளர்ப்பு மகனை பார்த்த ரஷ்ய பெண், அவனால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனை தனது மகனிடம் சொல்ல அவனும் சரி என்று சொல்லியுள்ளார். இதையடுத்தே, இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.