Search
Search

ஆற்றல் விமர்சனம்

இயக்குனர் கே எல் கண்ணன் இயக்கத்தில் வித்தார்த் , ஸ்ரீதா ராவ், சார்லி, வம்சி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஸ்வின் ஹேமந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை

மெக்கானிக்கல் இன்ஜினியராக இருக்கும் விதார்த், ஆள் இல்லாமல் ஓடும் காரை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அதற்கு பத்து லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இதற்காக விதார்த்தத்தின் தந்தை சார்லி 10 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து கொண்டு வருகிறார்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை கொலை செய்து விட்டு பணத்தை திருடி சென்று விடுகின்றனர். இதனை அடுத்து தனது தந்தையின் கொலை காரணமானவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் விதார்த் இறங்குகிறார்.

இறுதியில் விதார்த் மர்ம நபர்களை கண்டுபிடித்தாரா? அவரது கனவு என்ன ஆனது? என்பதை படத்தின் மீது கதை.

cinema vimarsanam

விதார்த் வழக்கம்போல எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். விதார்த் என் தந்தையாக சார்லி நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

நாயகியாக நடித்துள்ள ஷிரிதா ராவ் அழகான நடிப்பை கொடுக்க விக்னேஷ், வம்சி கிருஷ்ணா என படத்தில் நடித்துள்ளவர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

அஸ்வின் ஹேமந்த் இசையும் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவும் படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

You May Also Like