Search
Search

குருவிடம் 300.. மாச சம்பளம் 6000 – “கிறுக்கல்கள்” படைத்த நாயகன் கடந்து வந்த புதிய பாதை!

தான் படைத்த முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற சில இயக்குநர்களில் இவரும் ஒருவர். இதுவரை இவர் இயக்கியது 15 படங்கள், அதில் மூன்று பண்டங்களுக்கு தேசிய விருது. கடைசியாக இவர் எழுதி, இயக்கி, நடித்து வெளியிட்ட படத்திற்கு எத்தனை விருதுகள் கிடைத்துள்ளது என்பதற்கு சரியான (இன்டர்நேஷனல் விருதுகள் மட்டுமே 20க்கு மேல்) கணக்கு இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ராணுவ வீரன் படத்தில் இவர் நடிகராக அறிமுகமாகினர் என்று கூறப்படுகிறது. ஆனால் நான் இவரை கண்டு ரசித்த முதல் படம் தாவணி கனவுகள், அன்று துவங்கி இன்று வரை அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் ஆயிரம்.

இவர் இயக்கத்தில் ஒரு படம் வெளிவருகின்றது என்றால் நிச்சயம் அதில் புதுமையை எதிர்பார்க்கலாம். என்னதான் பெரிய நடிகன், இயக்குநர், தயாரிப்பாளர் என்றாலும் அவர்களின் ஆரம்பம் மிக சிறிய அளவில் தான் இருந்திருக்கும்.

இவரும் அதற்கு விதிவிலக்கல்ல, தான் கடந்து வந்த அந்த பாதை குறித்த ஒரு தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அய்யா பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, டப்பிங் ஆர்டிஸ்டாக இவர் வலம்வந்ததையும் குறிப்பிட்டுள்ளார். நான் இதுவரை அவர் பெயரை சொல்லவில்லை, காரணம் புதிய பாதை என்ற இரு வரி போதும் ராதையின் கிருஷ்ணனை அனைவரும் அறிவர்.

You May Also Like