நடிகர் வீட்டில் குவிந்து கிடந்த 2000 ரூபாய் நோட்டுகள்?.. ட்விட்டரில் அலப்பறை கொடுத்த விஷ்ணு!

தெலுங்கு உலகில் பிரபலமான நடிகர்கள் தான் விஷ்ணு மன்சு மற்றும் கிஷோர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வப்போது விளையாட்டாக கிண்டல் செய்துகொள்வது வழக்கம். அந்த வகையில் ட்விட்டர் பகுதியில் ஒரு பகீர் விஷயத்தை சில தினங்களுக்கு முன்பு செய்திருந்தார் விஷ்ணு.
தனது ட்விட்டர் பக்கத்தில், குவியலாக கிடக்கும் 2000 மற்றும் 500 நோட்டுகளின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இது நான் அண்மையில் நடிகர் கிஷோர் வீட்டுக்கு சென்றபோது அங்கு எடுத்த ஒரு புகைப்படம் என்று கூறினார்.
தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால், இதை மாற்ற அவர் எவ்வளவு கஷ்டப்படப்போகிறாரோ என்று கூறி அந்த பதிவை போட்டிருந்தார். இந்த பதிவு பலரால் நகைச்சுவையாக பார்க்கப்பட்டாலும், சிலர் இதை கண்டித்து பதில் ட்வீட் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஷயம், விவகாரம் ஆனதும் அதற்கு பதில் அளித்துள்ள விஷ்ணு, “நான் கிஷோர் மீது விளையாட்டாக செய்த விஷயம், தற்போது வேறு திசையில் செல்கின்றது. எனக்கும் அவருக்குமான இந்த சிறிய சண்டைகள் குறித்து அனைவரும் அறிவார்கள். ஆனால் அதை அறியாதவர்கள் அதை தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் அவர் ட்வீட் போட்ட அந்த புகைப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அவர் கூறவில்லை. விளையாட்டாக அவர் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகின்றது.