விகடன் விருதுகள்.. போவோமா? வேண்டாமா? – பார்த்திபன் ட்வீட் வைரல்

தனது திறமைக்கு உரிய பரிசை எதிர்பார்ப்பதில் எந்தவித தவறும் இல்லை, அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் புதுமைக்கும், தனித்துவத்திற்கும் பெயர் பெற்ற ஒருவர் தான் இரா. பார்த்திபன்.
கிண்டல் செய்வதில் மன்னன், எதுகை மோனையில் பேசுவதில் கண்ணன். இறுதியாக இரவின் நிழலில் குடிகொண்டிருக்கும் திரையுலக பிரம்மா. தனக்கென புதிய பாதையில் நடக்க துவங்கி, சுகமான பல சுமைகளை சுமந்தவர். புள்ளகுட்டிக்காரனாக ஆனா பிறகும் இவர் தொட்ட படங்கள் எல்லாமே House Full தான், வித்தகன் இவரின் குடைக்குள் மழை பெய்ய ஒத்த செருப்பு சைஸ் 7ளுடன் வளம் வரும் இவர் தன் வாழ்க்கையை துவங்கியது ராணுவ வீரனாக.
இவ்வளவு பில்டப்புக்கும் உரித்தான ஒரு சிந்தை சிற்பி, இயக்கம் வேணுமா இயக்கம் இருக்கு, தயாரிப்பு வேணுமா தயாரிப்பு இருக்கு, வசனம் வேணுமா அதுவும் இருக்கு, இன்னும் இவரிடம் நிறைய இருக்கு. விகடன் விழாவில் நடந்த சகலமும் நாம் அறிவோம், ஆனால் இந்த முறையும் விகடன் விருது வழங்கும் விழாவில் இவருடைய இரவின் நிழலுக்கு படத்திற்கு எந்த விருதும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விகடன் விருது வழங்கும் விழாவிற்கு அழைப்பு வந்த நிலையில் போலாமா வேண்டாமா என்று யோசிப்பதாக அவர் பாணியில் ஒரு ட்வீட் செய்துள்ளார்.