கவர்ச்சியை அள்ளித்தெளிக்கும் கீர்த்தி – அடுத்தடுத்து வெளியாகும் போட்டோஷூட்
இந்திய சினிமாவில் உள்ள வாரிசு நடிகர்கள் பட்டியலில் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு இடம் உண்டு. 1992ம் ஆண்டு பிறந்த கீர்த்தி சுரேஷ், பிரபல நடிகை மேனகாவின் மகள் என்பதை அனைவரும் அறிவோம். சிறு வயது முதலே படங்களில் நடித்து வந்தாலும் வெளிநாட்டுக்கு சென்று பேஷன் டிசைனிங் முடித்தவர் தான் கீர்த்தி சுரேஷ்.
2000மாவது ஆண்டு வெளியான Pilot என்ற மலையாள படத்தில் தனது எட்டு வயதில் நடிக்க தொடங்கிய கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் தமிழில் “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தில் நடிகையாக களமிறங்கினார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
2018ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “மகாநதி” (நடிகையர் திலகம்) படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய், சூரியா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் படங்களை நடித்து வரும் கீர்த்திக்கு இந்த 2023ம் ஆண்டில் ஆறு திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு அவருடைய தசரா திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல கடந்த சில நாட்களாக, மெல்லிய கவர்ச்சியுடன் அவர் அப்பொழுது போட்டோ ஷூட்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
