இந்த ரெண்டு விஷயம் தான் எனக்கு பிரதானம்.. மாளவிகா மோஹனன் லேட்டஸ்ட் கிளிக்!

மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த பிறகு தமிழில் அறிமுகமான நடிகை தான் மாளவிகா மோஹனன். இதுவரை தமிழில் மூன்று திரைப்படங்கள் மட்டுமே அவர் நடித்துள்ளார் என்றாலும் கோலிவுட் உலகிலும் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.
1993ம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர், பிரபல ஒளிப்பதிவாளர் மோஹனன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையை போலவே சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர் “பட்டம் போலே” என்ற திரைப்படத்தில் தோன்றி தனது திரை பயணத்தை தொடங்கினார்.
அதன் பிறகு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த இவர் 2019ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் சசிகுமார் அவர்களின் ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு மாஸ்டர் படத்தில் கதையின் நாயகியாக தோன்றியவர், மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்பொழுது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் அவர்களின் தங்கலான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் மோஹனன், உடற்பயிற்சி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருபவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு பதிவில் “நான் ஒன்று என் பணியை செய்து கொண்டிருப்பேன், அல்லது ஜிம்மில் இருப்பேன் என்று கூறி சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.