“உன்னை நினைக்காத நாளில்லையடி”.. நடிகை மோனலை நினைவுகூரும் அக்கா!

நேற்று தமிழ் புத்தாண்டை நாம் அனைவரும் சந்தோஷமாக கொண்டாடி வந்த அதே நேரத்தில், ஒரு மூத்த நடிகை தனது தங்கையின் மறைவை எண்ணி மனம் வருந்தியுள்ளார். சிம்ரன், 90களில் துவங்கி பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
இன்றும் அவருக்கு திரையுலகில் மவுசு அதிகம், ஆனால் அவருடைய தங்கையும் நடிகையுமான மோனலை நியாபகம் இருக்கின்றதா?. நிச்சயம் 90s கிட்ஸ் மறக்கமாட்டார்கள், வெறும் 21 வயதே நிரம்பிய நடிகை மோனல் இறந்து நேற்றோடு 21 ஆண்டுகள் கடந்துவிட்டது.
1981ம் ஆண்டு பிறந்த அவர், அக்காவை போலவே நடிகையாக வலம்வந்தார் தனது 19 வயதில் நடிக்க துவங்கிய இவர் 8 தமிழ் படங்களில் நடித்துள்ளார். வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடிப்புத்துறையில் இருந்தார் என்றபோதும் குறுகிய காலத்தில் ரசிகர்களை ஈர்த்தவர்.
காதல் தோல்வியால் 14 ஏப்ரல் 2002 அன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது அக்கா சிம்ரன் பேசுகையில் “நடன இயக்குநர் பிரசன்னா என்பவர் மோனலை காதலித்து வந்ததாகவும். அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் அவர்கள் பிரிந்தார்கள் என்றும் அப்போது கூறியது குறிப்பிடத்தக்கது.