“கருப்பு வெள்ளை புகைப்படத்தில்.. சிவப்பு வண்ண ரோஜா” – Cute பிரியா பவனி சங்கர் கிளிக்ஸ்!

பிரியா பவானி சங்கர், முதலில் முன்னணி தமிழ் செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர். அதன்பிறகு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்கின்ற சின்னத்திரை நாடகத்திலும் நடித்து வந்தார்.
சினிமா மீது உள்ள தீராக்காதல் இவரை திரைத்துறைக்கு அழைத்து வந்தது, முதன் முதலில் 2017ம் ஆண்டு ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்து கலக்கினார்.
சினிமாவிற்கு வந்து 6 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்றபோது இன்றைய தேதியில் இவரும் ஒரு டாப் ஹீரோயின். இந்த 2023ம் ஆண்டில் மட்டும் இவர் நடிப்பில் சுமார் 8 திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கிறது.
தமிழ் மட்டுமல்லாமல் அப்போது தெலுங்கு மொழியிலும் சில திரைப்படங்களை இவர் நடித்திருக்கிறார். பரபரப்பாக உருவாகி வரும் ஷங்கர் மற்றும் உலக நாயகனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு சூப்பரான ஃபோட்டோ சூட்டையும் வெளியிட்டுள்ளார் பிரியா.