Connect with us

TamilXP

அகத்திக் கீரையின் மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்

அகத்திக் கீரையின் மருத்துவ குணங்கள்

அகத்திக்கீரையின் தாயகம் இந்தியாதான். அகத்தி கீரை உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றி குடலை நன்கு சுத்தம் செய்யும் இதனால் மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் அகலும்.

அகத்திக்கீரையை கசப்பு சுவையும் துவர்ப்பு சுவையும் கொண்டது. இதனை பொறியல் செய்தும் கூட்டு செய்தும் சாப்பிடலாம்.

இதன் கசப்பு சுவை தெரியாமல் இருக்க துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்புடன் தேங்காய் துருவலும் சேர்த்து சமைக்கலாம்.

அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகையை குணமாக்கும். தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

நெஞ்சு சளி, தோல்நோய் போன்றவைகளுக்கு அகத்திக்கீரை நல்ல பலனை தரும்.

ஒரு டம்ளர் மோரில் ஒரு தேக்கரண்டி அகத்திக்கீரை கலந்து அதிகாலையில் குடித்து வந்தால் பித்தம் குணமாகும்.

வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்திக்கீரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டுவந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

குழந்தை பிறந்ததும் உடல் பருமன் ஆகாமல் இருக்க வாரத்திற்கு இரண்டு வேளை பாலூட்டும் பெண்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் ஆகாமல் இருக்கும்.

அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரை எடுத்துக் கொள்வது நல்லது.

அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.

அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுவலி குணமாகும்.

அகத்திக்கீரையுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

அகத்திக்கீரையை அரைத்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

சித்த மருந்துகள் எடுத்துகொள்ளும் போது அகத்திகீரை சாப்பிடக் கூடாது.

பொதுவாக அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அதிமானால், மருந்தாகச் செயல்படவேண்டிய கீரை, எதிராகச் செயல்பட்டு சொறி, சிரங்கை உருவாக்கிவிடும்.

அகத்திக்கீரையையும், கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.

மது குடித்துவிட்டு அகத்திகீரையைச் உண்ணக்கூடாது. ஏனென்றால், இது மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தமான பாதிப்புகளை உருவாக்கும்.

இது போன்று மருத்துவம், அனைத்து கீரைவகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

To Top